நாளாந்தம் மக்களை குழப்பும் அரசு! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் நாளாந்தம் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால், குறித்த மின் தடையை எதிர்பார்ப்பதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுகிறது.
அத்துடன், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளது.
இதன்படி, மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி, மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.