அமைச்சர் நாமலை சந்தித்த வலைப்பந்தாட்ட தமிழ் வீராங்கனை தர்சினி!
வலைப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகக் கருதப்படும் இலங்கைத் தமிழ் வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்சினி சிவலிங்கம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை (Namal Rajapaksa) சந்தித்துள்ளார்.
தர்ஜினி சிவலிங்கம் (Tharjini Sivalingam) தனது வாழ்நாள் முழுவதும் இலங்கை வலைப்பந்தாட்ட விளையாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவரது திறமைகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டது. அவரது கதை நம் நாட்டில் உள்ள பல இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு உண்மையிலேயே ஒரு ஊக்கமாக உள்ளது.
தர்ஜினி சிவலிங்கத்தின் அனுபவத்தைப் பயன்படுத்தி வடக்கில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


