இது இலங்கையர்களுக்கான நாடு - சபையில் திடீரென ஆவேசமடைந்த மனோ!
இலங்கை அனைவருக்கும் பொதுவான, சமனான நாடு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano ganesan) ஆவேசத்துடன் சபையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11-02-2022) இடம்பெற்ற சபை கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் என்ன நடக்கிறது. ஒருவரிடம் உள்ள அதிகாரத்தை பறித்து இன்னொருவருக்கு நாம் கொடுக்கச் சொல்லவில்லை. கொடுத்தால் சமமாக கொடுங்கள். கொழும்பில் கொடுத்து விட்டு, எல்லோருக்கும் கொடுத்து விட்டோம் என்று சொல்லாதீர்கள்.
நீங்கள் கொடுப்பது முழு நாட்டுக்கும், அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும். அதேபோன்று ஒருவரிடம் உள்ளதை பறித்து ஏனையவர்களுக்கு கொடுக்கவும் வேண்டாம்.
இது தமிழர்களுக்கான அல்லது முஸ்லிம்களுக்கான அல்லது சிங்களவர்களுக்கான நாடு அல்ல. இது இலங்கையர்களுக்கான நாடு.அதனை சிங்கள பௌத்த நாடு என்று கூற வேண்டாம். அனைத்து மக்களுக்குமான சமனான நாடு இது. அதிகாரம் எல்லோருக்கும் பரவலாக கிடைக்க வேண்டும். – என்றார்.