கொழும்பில் போக்குவரத்து கட்டுப்பாடு தீவிரம்! வெளியான தகவல்
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு, கொழும்பில் பல பகுதிகளிலும் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்கு சில வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (04-02-2022) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, கேம்பிரிட்ஜ் சந்தியிலிருந்து எல்பட் சந்திரவங்க வீதியில் நுழைதல், நூலக சந்தியிலிருந்து மார்கஸ் பெர்னாண்டோ வீதிக்கு நுழைதல், நூலக சந்தியிலிருந்து ஆனந்த குமாரசுவாமி வீதியில் நுழைதல், தர்மபால வீதியில் எஃப்.ஆர்.சேனாநாயக்க வீதிக்கு நுழைதல்,
மேலும், சொயிசா சுற்றுவட்டத்திலிருந்து சி.டபிள்யு.டபிள்யு.கண்ணங்கரா வீதிக்கு நுழைதல், எஃப்.ஆர்.சேனாநாயக்க வீதியிலிருந்து சி.டபிள்யு.டபிள்யு.கண்ணங்கரா வீதிக்கு நுழைதல், விஜேராம மாவத்தையிலிருந்து சி.டபிள்யு.டபிள்யு.கண்ணங்கரா வீதிக்கு நுழைதல்,
விஜேராம மாவத்தையிலிருந்து பான்ஸ் நடைபாதை ஊடாக சி.டபிள்யு.டபிள்யு.கண்ணங்கரா வீதிக்கு நுழைதல், ஹோர்டன் பகுதியிலிருந்து விஜேராமசந்தியில் ஹோர்டன் மெட்லன்ட் கிரசன்ட் சந்திக்குள் நுழைதல்,
மற்றும் விஜேராம மாவத்தையிலிருந்து ஆர்.ஜீ.சேனாநாயக்க வீதி ஊடாக மெட்லன்ட் கிரசன்ட் வீதிக்கு நுழைதல், ஹோர்டன் பகுதியிலிருந்து கிரசன்ட் சந்தி ஊடாக ஹோர்டன் சுற்றுவட்டத்திற்குள் நுழைதல்,
ஆர்.ஜீ.சேனாநாயக்க வீதியிலிருந்து மெட்லன்ட் கிரசன்ட் வீதிக்கு செல்லுதல் , விஜேராமமாவத்தை வித்தியா மாவத்தை சந்தியிலிருந்து வித்தியா மாவத்தைக்குள் நுழைதல், வித்தியா மாவத்தையிலிருந்து மெட்லன்ட் பகுதிக்கு நுழைதல்,
மற்றும் பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து ஆர்.எஃப்.பீ.சந்தியின் மெட்லண்ட் பகுதிக்கு மாறுதல் , பௌத்தாலோக்க மாவத்தை டொரிங்டன் சந்தியிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்கு நுழைதல், பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தையிலிருந்து சுதந்திர வீதிக்கு நுழைதல்,
மன்றக்கல்லூரிக்கு அருகில் சுதந்திர சதுக்க பகுதிக்குச் செல்லல், மன்றக்கல்லூரி வீதியிலிருந்து சுதந்திர வீதிக்குச் செல்லல் மற்றும் சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர வீதி மற்றும் மெட்லன்ட் கிரசன்ட் பகுதிக்குச் செல்லல் என்பன காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.