மீண்டும் வைத்தியசாலைகள் நிரம்புகிறதா? வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்தால் அதனை சமாளிக்க கூடிய வகையில் தயார் நிலையில் உள்ளோம், தற்போது வைத்தியசாலையில் நிரம்பல் நிலை இல்லை என பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓமிக்ரோன் மாறுபாடு கொரோனா நோயாளர்களால், மீண்டும் வைத்தியசாலை படுக்கைகள் நிரம்பி வழிகின்றன என்ற குற்றச்சாட்டை நாம் மறுக்கின்றோம்.
வைத்தியசாலை படுக்கைகளில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. அதேவேளை நோயாளர்கள் யாரும் திருப்பி அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெரும்பாலான நேரங்களில் அதிகமான படுக்கைகளை வைத்தியசாலையில் வைத்திருப்பதில்லை. எனினும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நாம் அதனை அதிகரிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளுக்கு நாள் கிட்டத்தட்ட 5,000 நோயாளர்கள் பதிவாகிய காலமும் காணப்பட்டது. இப்போது அவ்வாறு இல்லை என்றார்.