இதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது! மஹிந்த
நாட்டில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு காரணம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறையில் நடைமுறைப்படுத்த தவறியமையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தொடர்ந்தும் மின்சாரம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது. தற்போதைய நிலைமைக்கு எவரையும் குறை கூற முடியாது. இந்த விடயம் தொடர்பான வேலைத்திட்டத்தை வகுக்கத் தவறியதன் விளைவே இது.
மேலும், 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.