எதிர்வரும் காலங்களில் இலங்கை பாரிய சவால்களை சந்திக்க நேரிடும்- ஐ.நா எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு இலங்கை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உணவுத் தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துதல் என்பன இலங்கைக்கு பாரிய பிரச்சினைகளாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைப்பின் அறிக்கை, சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் உள்ள மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இருந்தபோதிலும் வட்டி விகிதங்களை உயர்த்தின.
இது இந்த நாடுகளுக்கு நிதி மற்றும் விலை ஸ்திரத்தன்மையை பராமரிப்பதை கடினமாக்கும்.
இலங்கை, பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் 64 வீதமான மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது.