கடன் தேடி முக்கியப் பேச்சுவார்த்தையில் இலங்கை!
இந்தியாவிடமிருந்து நாட்டிற்கு கிடைக்கவுள்ள 500 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் 4 பில்லியன் டொலர்கள் எரிபொருளை விநியோகிக்க அவசியமென தெரியவருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைகளுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க வேண்டுமாயின் தமக்கு டொலர் தேவைப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மத்திய வங்கியிடம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மேலதிகமான நான்கு பில்லியன் டொலர்களை எப்படி தேடுவது என்பது தொடர்பாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கோரிக்கைக்கு அமையவே அரச தலைவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நாட்டிற்கு மாதாந்தம் தேவைப்படும் எரிபொருள் தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு 90 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொன் டீசலும்,, 90 ஆயிரம் மெற்றி தொன் கச்சாய் எண்ணெயும் தேவைப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.