இலங்கையில் தனியார் பேருந்துகளில் வரவுள்ள புதிய மாற்றம்!
இலங்கையில் தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் நவீன முறைமை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளது.
மேலும், கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, கியூ.ஆர் குறியீட்டு நடைமுறை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அட்டை முறைமை மற்றும் கியூ.ஆர் குறியீட்டு எதிர்வரும் 24-01-2022 திகதி முதல் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளது. விரைவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், 163 இலக்க பேருந்து மார்க்கமான தெஹிவளை – பத்தரமுல்ல மார்க்கத்தின் பயணிக்கும் ஒரு பேருந்தில் இதனை முதல் கட்டமாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் முற்கொடுப்பனவு அட்டை முறையில் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.