இலங்கையில் பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம் ; இனி இந்த தகவல்கள் தேவையில்லை
பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விவரத்தை சேர்ப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிறந்து 2 நாட்களே ஆன சிசு ஒன்று வயல் ஒன்றில் இருந்து நேற்றைய தினம் (17) மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (18) கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சட்ட ஆதரவு இல்லை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தந்தையின் பெயர் இல்லையெனில் தாயின் குடும்பப்பெயருடன் குழந்தையை பதிவு செய்யலாம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கருக்கலைப்புக்கு சட்ட ஆதரவு இல்லை என்றும், மாணவிகள், சிறுவயது தாய்மார்கள் போன்றோருக்கு சரியான விழிப்புணர்வும், பாதுகாப்பும் தரப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பாலியல் கல்வி அவசியம் எனக் கூறிய அவர், கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.