இலங்கையுடனான அடுத்த ஆட்டங்களில் ஸ்மித் இல்லை!
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith)வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) இற்கு தலை உபாதை ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தலையில் ஏற்பட்ட உபாதையில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) குணமடைந்து வருவதாகவும் அது பூரண குணமடைவதற்கு இன்னும் 6-7 வரையிலான நாட்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் ஸ்மித்தின் (Steve Smith) இடத்தினை நிரப்புவதற்கு எந்த வீரர்களையும் அவுஸ்திரேலிய அணி அழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.