பாடசாலை மாணவி மீது கத்திக்குத்து; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
கந்தளாய்,பெரமடுவ பிரதேசத்தில் கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி வீட்டில் இருந்த போது கத்தியால் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை இந்த வாள்வெட்டுச் சம்பவத்தின் போது சிறுமியின் தாயும் வீட்டில் இருந்துள்ளதுடன், தாக்குதல் இடம்பெற்ற போது சந்தேகநபர் வீட்டில் பதுங்கியிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
இதன்படி கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞன் கந்தளாய் பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.