ஆட்சி மாற்றமே நாட்டின் தற்போதைய உடனடித் தேவை
இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளதாகவும் எனவே ஆட்சி மாற்றமே நாட்டின் தற்போதைய உடனடித் தேவை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
அத்துடன் மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என தன்னால் கூற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது என்றும் நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளதாகவும் சந்திரிகா குற்றம் சுமத்தினார்.
நாட்டில் ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை என குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு அழைப்புவிடுத்துள்ளார்.
மேலும் அவ்வாறு இணையாவிட்டால் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் என்றும் சந்திரிகா குமாரதுங்க, இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.