பிரிட்ஜில் இந்த உணவை மறந்தும் கூட வைக்காதீர்கள்! பெரும் கேடு தரும்
நம்மில் பலருக்கு முட்டையை மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. அது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
மேலும், அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுவதோடு, அது மிக சீக்கிரம் பாலைப்போல் திரிந்துவிடும் என பகீர் தகவல் அளித்துள்ளனர்.
முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்த பின், அதனை பயன்படுத்தும் போது அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் நிலையில், வெப்ப நிலை மாறுபாட்டினால், முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே சென்று விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்ந்நிலையில், முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும். மேலும், பிரிட்ஜில் முட்டைகளை வைப்பதால், முட்டைகளின் இயற்கையான சுவை மாறுபட்டு விடும்.
சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் முட்டையை உட்கொள்ளும் நம், அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரிக்கும் போது, முட்டையின் சத்துக்கள் அழிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால், குளிர்சாதனப் பெட்டியில் முட்டையை வைத்து சாப்பிடுவதால், அதன ஆரோக்கிய நன்மைகள் எதுவும் கிடைக்காது என்பதோடு, அதனால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு தான் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.