2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு ; விபத்தா ? கொலையா ?
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 33 வயதான கே.பாஸ்கரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த குடும்பஸ்தர் இன்று காலை குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்திற்கு அருகில் இருந்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது.
இதையத்து சம்பவ இடத்திற்கு சென்ற அடம்பன் பொலிஸார், குறித்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
