கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணைவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணைவேந்த ராக பேராசிரியர் வல்லியபுரம் கனகசிங்கம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரான்குளம் கிராமத்திலிருந்து தனது கடும் உழைப்ப லும் இடைவிடாத முயற்சியாலும், இன்றைய உயர் நிலையை இவர் அடைந்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த இவர் தொடர்ந்து விரிவுரையாளராகவும், அதனைத் தொடர்ந்து வர்த்தக முகாமைத்துவபீட பீடாதிபதியாகவும் செயற்பட்டார்.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை வளாகத்தின் இயக்குனராக செயற்பட்டு அதன் இன்றைய வளர்ச்சிக்கு தனது பாரிய பங்களிப்பை நல்கியிருந்தார். இவரது காலத்தில் திருகோணமலை வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முழு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனவரி 22 ஆஎதிர்வரும் ஜனவரி 22 ஆந்திகதி முதல் நடைமுறைக்கு வரும் வண்ணம் கிழக்குப் பல்கலை;கழக துணைவேந்தராக கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில் இவரது காலத்தில் இப்பல்கலைக்கழகம் பல அபிவிருத்திகளையும், கல்வியில் எழுச்சியையும் பெறும் என பல்கலைக்கழக கல்விச்சமூகம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.