திடீரென பிக்பாஸ் வீட்டைவிட்டு சென்ற பிரியங்கா!
100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நாளையுடன் முடிவடைய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அமீர், சஞ்சீவ் இருவரும் வைல்டு கார்டு வழியாக இணைந்தார்கள்.
அடுத்தடுத்த வாரங்களில் நடந்த எவிக்ஷனில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறி நிறைவாக அமீர், நிரூப், ராஜு, பிரியங்கா, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றில் உள்ளனர். கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடின் ஷூட்டிங் இன்று காலை தொடங்கி தற்போது நடந்து வருகிறது.
அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங்க்கும் இன்றுதான். இதற்கிடையில் நேற்று முன் தினம் போட்டியாளர்களில் ஒருவனான தொகுப்பாளர் பிரியங்காவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நிகழ்ச்சியிலேயே அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் பிரியங்காவுக்கு என்ன பிரச்னை என விசாரித்த போதுதான் அவர் நேற்று முன் தினம் மாலை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற தகவலும் கிடைத்தது.
இந்நிலையில் பிரியங்கா குறித்து கசிந்துள்ள தகவல்களின்படி,
'மருத்துவமனைக்குப் போகுற அளவுக்கு திடீர்னு பிரியங்காவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதும், பக்கத்துல இருந்த மருத்துவமனைக்குக் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், பிரியங்காவை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சையளித்த பின்னர் , பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரேயொரு நாளுடன் நிறைவடைய உள்ள நிலையில் விரும்பினால் அங்கு செல்லாலாமென கூறியுள்ளனர்.
இதனையடுத்து பிரியங்கா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இன்று நடைபெறும் கடைசி நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது .