பிக் பாஸ் சீசன் 5வில் பிரியங்காவிற்கு கிடைத்த இன்பதிர்ச்சி
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5வது சீசன் இறுதி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் ராஜூ பிக்பாஸ் டைட்டிலையும், பிரியங்கா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். இந்நிலையில் விஜய் டிவியில் இன்று பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த ஐந்தாவது சீசனின் தொடக்கத்தில் அது அதிகம் கவனிக்கப்படவில்லை.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல பிரியங்கா, ராஜு, தாமரை செல்வி என சீசன் சூடுபிடித்து ஏற்கனவே 106 நாட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இந்நிலையில் மற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா மற்றும் ராஜூ மட்டுமே உள்ளனர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன், பிரியங்காவை தோளில் கைவைத்து போட்டோவும், அதைத் தொடர்ந்து ராஜுவுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டு அவர்களை அழைத்துச் சென்றார்.
இது பார்வையாளர்களான பிரியங்கா மற்றும் ராஜூவுக்கு எதிர்பாராத இன்பதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.