இலங்கையில் மூடும் நிலையில் உள்ள தபால் நிலையங்கள்
தபால் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய மேலாளர்கள் மற்றும் பொது அஞ்சல் ஊழியர்கள் இல்லை. 6,000 ஆக இருக்க வேண்டிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, தற்போது 4,000 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் பணியாளர்களை நியமிக்க அனுமதி கோரப்பட்ட போதிலும், இதுவரை அரசின் அனுமதி கிடைக்கவில்லை. பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வாக ஓய்வு பெற்ற 500 தபால் அலுவலர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முன்வந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தபால் ஊழியர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு நகர எல்லைக்குள் தற்போது 35 ஊழியர்களைக் கொண்ட பொரளை தபால் நிலையத்தில் 7 ஊழியர்கள் மாத்திரமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தபால் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரி மகப்பேறு விடுப்பு எடுத்தால் அலுவலகம் மூடப்பட வேண்டும் என்றார்.