ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெளியேற சொன்ன அமைச்சர்!
நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எமக்கு நன்மை பயக்கவில்லை. மொட்டு கட்சியால்தான் சுதந்திரக் கட்சி பயன் அடைந்தது.
எம்முடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் 14 ஆசனங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு இல்லாவிட்டால் ஒருவர்கூட வெற்றிபெற்றிருக்க முடியாது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனக்கான நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே, இருக்கமுடியாவிட்டால், உள்ளுக்குள் இருந்து விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்காது, வெளியேற வேண்டும் என எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.