புதையல் தோண்டிய நபர் ஒருவர் கைது...ஆறு பேர் தப்பியோட்டம்
அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குருவில் வான்பரப்பில் இராணுவத்தினரும் அடம்பன் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்கனவே அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய 6 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.