பிக் பாஸ் வீட்டில் சண்டையிட்ட நிரூப்...கதறி அழுத பிரியங்கா
பிக் பாஸ் போட்டியானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தற்போது நடத்தப்படும் ஒவ்வொரு போட்டியும் கடுமையாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைவருக்கான போட்டியின்போது நேற்றைய தினத்தில் காரசாரமான விவாதம் எழுந்தது. அதன்போது தலைவருக்கான போட்டியில் ஏன் வெற்றி பெற வேண்டும்? என விளக்கமளிக்கும் போது நிரூப் மட்டும், ‘எனக்கு நாமினேஷனுக்கு செல்ல பயமாக இருக்கிறது’ என்று சொன்னதும் பிரியங்காவிற்கு சுர்ருன்னு கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் நிரூப் கடந்த பஸ் டாஸ்க்கிலும் இதே காரணத்தை சொல்லி, பலருடைய அனுதாபத்தை பெற்ற அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று எலிமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
அதே காரணத்தை மீண்டும் மீண்டும் சொல்லி கடுப்பேத்தாத என்று நிரூப்பிடம் பிரியங்கா தன்னுடைய பாணியில் சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த நிரூப், கயிற்றை விட்டு விட்டு போட்டியில் இருந்து விலகி விட்டார்.
இருப்பினும் அவர் தோல்வியை சந்தித்ததற்கு பிரியங்கா தான் காரணம் என்று திட்டியதுடன், ‘மனதில் வைத்துக்கொண்டே பழிவாங்கும் நரியக்கா, ஈவில், பாய்சன், மற்றவர்களின் கஷ்டத்தில் சந்தோஷப்படுகிறவள், உனக்கு பிடிக்கலைன்னா சாக்கடையில் குழி தோண்டி புதைத்து விடுவாய்’ என்ற வார்த்தைகளினால் பிரியங்காவிடம் நிரூப் கடுமையாகப் பேசினார்.
பிரியங்கா எப்போதும் நிரூப் அவர்களுக்கு துணையாகவே இருந்து வந்துள்ளார். இருப்பினும் ஒரு டஸ்க்காக நிரூப் இவ்வாறு நடந்துக் கொண்டது தவறு என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.