ஜனாதிபதி வருகைக்கு முன்பு திறக்கப்பட்ட வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பெயர் பலகை
வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெயர் பலகை ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக இலங்கை வங்கியினால் திறக்கப்பட்டது.
வவுனியா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டதுடன் அதன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று விஜயம் செய்தார்.
இந்நிலையில், வவுனியா பல்கலைக்கழக நுழைவாயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை இலங்கை வங்கியினால் நேற்று (09.02.2022) பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
பெயர்ப்பலகை திறப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.


