மூதூர் புவனேஸ்வரி வித்தியாலயத்தில் அவுஸ்திரேலிய முக்கியஸ்தர்!
மூதூர் – சேனையூர் புவனேஸ்வரி வித்தியாலத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் (David Holly) ஹொலி மற்றும் அவரது துணைவி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (12-01-2022) குறித்த பாடசாலைக்கு அவுஸ்திரேலிய தூதுவர் வருகை தந்துள்ளார்.
குறித்த அபிவிருத்தி திட்டம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள், நிருவாகத்தினரால் அவுஸ்திரேலிய தூதுவருக்கு உட்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், பாடசாலை நிருவாகத்தினால் தூதுவரிற்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, அவுஸ்திரேலிய தூதுவராலயத்தினால் குறித்த பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பார்வையிட்டனர்.