காலையில் வெறும் வயிற்றில் இந்த உணவை உட்கொள்ளுங்கள்: பல நன்மைகள் கிடைக்கும்!
முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை பயக்கும். மேலும் காலையில் வெறும் வயிற்றில் முளை கட்டிய பயறு அல்லது முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும், முளை கட்டிய பயறில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, தாது, ஆன்டி-ஆக்ஸிடன்ட், தாமிரம், வைட்டமின் ஏ, பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற கூறுகள் உள்ளன. முளை கட்டிய பயறில் கொழுப்பின் அளவும் மிகக் குறைவாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தும்: நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முளை கட்டிய தானியங்களை (Sprouts) உட்கொள்ளலாம். முளை கட்டிய தானியங்களில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது உங்களை நோய்களில் இருந்து காப்பாற்றும்.
வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்தும் : வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் முளை கட்டிய பயறை உட்கொள்வதும் நன்மை தரும். பயறில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்: முளை கட்டிய பயறை உட்கொள்வது இதயத்திற்கும் நன்மை பயக்கும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இதயம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
எடை இழப்புக்கு பெரிதும் பயன்படும்: உடல் எடையைக் குறைக்க முளை கட்டிய பயறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். முளை கட்டிய பயறில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்லது. இது எடையைக் குறைக்க உதவும்.