இலங்கையில் கொடூரம்: மனைவி - மாமியருக்கு வாள்வெட்டி! தீயில் எரிந்த நபர்
மனைவி மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சினையில், அவர்களை வாளால் வெட்டி விட்டு குறித்த நபர் தீயில் எரியுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தீயில் எரியுண்டு உயிரிழந்ததாக மொனராகலை மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீக்காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட இந்த நபர் இன்று காலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதான எம்.டப்ளியூ. ஞானசிறி லக்ஷ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளான மனைவி மற்றும் மாமியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.