தமிழ் வேண்டும்; கையெழுத்திட மறுத்த மனோ ; இடைநடுவில் நிறுத்தப்பட்ட விசாரணை!
சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ கணேசன் மறுப்பு தெரிவித்ததால் விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சென்றிருந்தார்.
இதன்போது, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் திட்டவட்டமாக ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு மனோகணேசன் கூறினார்.
இதனையடுத்து , விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.