ஹிஜாப் சர்ச்சை தொடர்பில் இந்திய தலைவர்களுக்கு மலாலா கோரிக்கை
இந்தியாவில் உள்ள தலைவர்கள் னைவரும் முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்தவேண்டும் என நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக கல்லூரி மாணவர்களிடையே ஹிஜாப் சர்ச்சை அதிகமாகி வருகிறது. உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்தும், முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்தும் கல்லூரிக்கு வந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மோதல் வெடித்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
சமூக ஆர்வலரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது,
“கல்வி மற்றும் ஹிஜாப் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய கல்லூரிகள் நம்மை வற்புறுத்துகின்றன.
ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் நுழையக் கூடாது என்று சொல்வது கடுமையானது. பெண்களின் புறக்கணிப்பு தொடர்கிறது. குறைவாக அணியுங்கள் அல்லது குறைவாக அணியுங்கள்.
இந்தியத் தலைவர்கள் முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்.
இதனிடையே ஹிஜாப் அணிவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.