நூலகத்தில் புத்தகங்களை கடனாக பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
நாடாளுமன்ற நூலகத்தில் இருந்து கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடனாகப் பெற்ற புத்தகங்களின் பட்டியலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) அறிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (19-01-2022) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்தது, நாடாளுமன்ற நூலகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் 330 புத்தகங்கள் கடனாக பெறப்பட்டுள்ளன.
இதன்படி, புனைவு சார்ந்த 122 நூல்கள், அரசியல் விஞ்ஞானம் சார்ந்த 94 நூல்கள், சமூகவியல் சார்ந்த 27 நூல்களும் பொருளியல் சார்ந்த 11 நூல்கள் விஞ்ஞானம் சார்ந்த ஐந்து நூல்கள், சட்டம் சார்ந்த 4 நூல்கள், தொழில்நுட்பம் சார்ந்த 3 நூல்கள் என்பன பெறப்பட்டுள்ளன.
இருப்பினும் கல்வி சார்ந்த ஒரு நூல் மாத்திரமே நாடாளுமன்ற நூலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் சார்ந்த உரிய தயார்ப்படுத்தல்கள் இன்மையே பொய், போலி குற்றச்சாட்டுக்கு காரணம் என மேலும் தெரிவித்துள்ளார்.