தோழியின் பிறந்தநாள் அன்று லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! இணையத்தில் வைரல்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்கள் மத்தியில் வெகு பிரபலம். அந்த அளவில் இந்த தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெரும்பாலும் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களே. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகில் வலம் வரும் வாய்ப்பினையும் பெறுகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே பெருமளவு அன்பையும் வரவேற்பையும் பெற்றவர் தான் இலங்கை தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா (Losliya).
இலங்கையில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதை கொள்ளை கொண்ட இவர் அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.
மேலும், இவரது சுட்டித்தனமான செயலும் அழகான இலங்கை தமிழ் பேச்சும் மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் இவரது காதல் காட்சிகள் இளைஞர்களை தனி ரசிகர் பட்டாளம் வரை கொண்டு சென்றது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் வெளியே வந்து தொடர்ந்து 4 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லொஸ்லியா.
இலங்கை தமிழ்ப் பெண் லொஸ்லியா அவரின் தோழியின் பிறந்தநாளை சில தினங்களுக்கு முன் நள்ளிரவு கொண்டாடிய போது வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தினை அலறவிட்டு வருகின்றது.
மேலும் லொஸ்லியாவின் தோழி பார்க்க நடிகை சமந்தா (Samantha) போலவே இருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் இந்த தோழி என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர். குறித்த புகைப்படத்திலும் லொஸ்லியாவும் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.