விமானத்தில் நடுவானில் பிரித்தானிய நபர் ஒருவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரிடம், சக பயணி ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதாக ஹீத்ரோ விமான நிலைய காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான பயணத்தின்போது பயணிகள் உறங்கி கொண்டிருந்ததாகவும் அப்போது பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் கட்டாயப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான பயண முடிவில் அந்த நபர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாடு மீது உடனடியாக விசாரணை நடத்திய லண்டன் விமான நிலைய காவல்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்பட்ட விமானப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் லண்டன் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஓத்துழைப்பு வழங்குவோம் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.