கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா ?
கடந்த அலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களிடம் நாம் பார்த்த மூச்சடைப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளும் தொற்று தீவிரமானதன் விளைவால் ஏற்பட்டவை.
`சைட்டோகைன் ஸ்ட்ராம்' (Cytokine storm) எனப்படும் இது பாதிக்கும்போது, ரத்த நரம்புகளில் சின்னச் சின்ன ரத்தக் கட்டு ஏற்பட்டு, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, பல உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்பிரின் மருந்து என்பது ரத்தக்கட்டுக்காகக் கொடுக்கப்படும் ஒன்று. மாரடைப்புக்கு இந்த மாத்திரையைக் கொடுக்கவும் அதுதான் காரணம்.
பிளட் தின்னர் வகையைச் சேர்ந்த இந்த மாத்திரை, ரத்தத்தைக் கட்டவிடாமல் நீர்த்திருக்கச் செய்யும்.
அதே காரணத்துக்காகத்தான் கோவிட் தொற்றிலும் அது பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் கோவிட் தொற்றுக்குள்ளான எல்லோருக்கும் இது தேவையில்லை.
இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்து, ரத்தப் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு, அவர்களின் நோயின் தீவிரம் தெரிந்து, தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவர் ஆஸ்பிரின் மாத்திரையையோ அல்லது வேறு பிளட் தின்னர் மருந்துகளையோ பரிந்துரைப்பார்."