வைத்தியர் பிரியந்தினியின் முதல் தெரிவு கண்டாவளையாக இருக்க வேண்டும்! (Photos)
சுகாதார அமைச்சு சொல்லியிருக்கிற இந்த விதியின் பிரகாரம் போட்டிப்பரீட்சையில் சித்தியடைகிற மருத்துவர் ஒருவர், அவர் எந்த தரவரிசையை பெறுகிறாரோ அதற்கு சமனான பணியிடங்களை தமக்காக கோர வேண்டும்.
உதாரணம்: 10 வது இடத்தைப் பிடித்த ஒரு மருத்துவர் தனக்கான பணியிடங்களுக்காய் கட்டாயம் பத்து பிரதேசங்களை தெரிவுசெய்தல் வேண்டும். முன்னைய ஒன்பது இடங்களைப் பெற்ற மருத்துவர்களின் தெரிவுப் பிரதேசங்கள் கழிய, இவர் தெரிவுசெய்திருக்கிற பிரதேசம் அவருக்கு வழங்கப்படும்.

இது வருடா வருடம் போட்டிப் பரீட்சையில் சித்தியடையும் மருத்துவர்கள் நாடளாவிய ரீதியில் பணியிடங்களுக்கு அமர்த்தப்படும் முறை.
இப்படியிருக்க ஆயிரத்து அறுநூறு பேரில் 1587 ஆவதாக வந்த சிங்கப் பெண் வைத்தியர், தனக்கான பணியிடங்களாக 1587 பிரதேசங்களை எழுத்திக்கொடுத்திருப்பார்.

அதை இருந்து எழுதவே இரண்டு வாரம் ஆகியிருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, " வன்னி மண்ணுக்கு சேவை செய்யவே கண்டாவளைக்கு வந்தேன் " என்று சொன்ன அம்மணி வைத்தியர் பிரியந்தினியின் (Dr.Priyantini) முதல் தெரிவு இலங்கை திருநாட்டின் வேறெந்த பிரதேசமுமாய் இராமல் கண்டாவளையாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என முகநூலில் Nibojan என்பவர் பதிவிட்டுள்ளார்.