யாழில் 7 பேர் உட்பட வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா!
யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேர் உட்பட வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று (21-01-2022) வெள்ளிக்கிழமை 155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் - 06 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர் இரணைமடு விமானப்படை முகாமில் - 04 பேரும், மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் (21-01-2022) வட மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.