உங்கள் கழுத்து கருமையாக இருக்கா? அதற்கு காரணம் இவைதானாம்!
முகம் உடல் அழகாக இருந்தாலும் சிலருக்கு கழுத்து பகுதி கருமையாக இருக்கும். இதனால் பலரும் கவலைகொள்வார்கள். இந்த நிலையில் உங்கள் கழுத்து பகுதியில் ஏற்படும் நிறமாற்றம் அல்லது கருமைக்கு , 8 காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அவையாவன:-
மரபியல் காரணம் :
அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் (Acanthosis Nigricans) எனப்படும் ஒரு கோளாறு கழுத்தைச் சுற்றி கருமை ஏற்பட காரணமாக இருக்கலாம். இது சருமத்தின் இருண்ட, வெல்வெட்டி ஹைப்பர் பிக்மென்டேஷன் பகுதியால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை ஆகும். இந்த நிலை பரம்பரை பரம்பரையாக வரலாம் அல்லது ஜெனிடிக் சிண்ட்ரோமின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

உடல் பருமன் :
பெரும்பாலும் கழுத்து மற்றும் அக்குளில் உள்ள தோல் கருமையாவதற்கான பொதுவான காரணங்கள், உடல் பருமன் மற்றும் எண்டோக்ரின் டிஸார்டரே ஆகும்.
அதிகப்படியான இன்சுலின் :
உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அதிகமாக இருப்பதற்கான ஒரு அறிகுறியே கருமையான கழுத்து எனவும் கூறப்படுகின்றது. எனவே சில அறிகுறிகளை நீங்கள் கண்டால், நீங்கள் உங்களின் இரத்த சர்க்கரையை பரிசோதித்து, ஒரு நீரிழிவு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது.

பிசிஓஎஸ் :
பிசிஓஎஸ் உள்ள பெண்களின் இரத்தத்தில் இன்சுலின் ஹார்மோன் அதிக அளவில் இருக்கும். இதன் விளைவாக சில சமயங்களில் கழுத்தின் பின்புறம், கைகளின் கீழ் மற்றும் இடுப்பு பகுதியில் கருமை உண்டாகும்.
சர்க்கரை நோய் :
முன்னரே குறிப்பிட்டபடி, உங்கள் கழுத்தின் பின்புறத்தில் உள்ள தோலில் ஏற்படும் கருமை திட்டுகள் பெரும்பாலும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறி என்றும் கூறப்படுகின்றது
ஹைப்போ தைராய்டிசம் :
மீண்டும், முன்னரே குறிப்பிட்டபடி சருமத்தில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும் அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்கிற நிலையானது, பொதுவாக உங்களுக்கு இருக்கும் தைராய்டு அல்லது எடை அதிகரிப்பு போன்ற மருத்துவ சூழ்நிலைகளுடன் தொடர்புடையது. இதன் விளைவாகவும் உங்கள் சருமம் கருமையாகலாம்.

வாசனை திரவியங்கள் அல்லது ஹேர் டை :
சிலருக்கு சில பொருட்களின் விளைவான ஒவ்வாமை இருக்கலாம், எனவே எந்தவொரு தயாரிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது,
லிச்சென் பிளானஸ் பிக்மென்டோசஸ் போன்ற நிலைகள் :
லிச்சென் பிளானஸ் பிக்மென்டோசஸ் (LPP) என்பது ஒரு நாள்பட்ட நிறமிக் கோளாறு ஆகும், இது சூரிய ஒளி படும் பகுதிகளான முகம், கழுத்து மற்றும் பிற நெகிழ்வான மடிப்புகளில் ஏற்படும் க்ரோனிக் பிக்மென்டேஷன் டிஸார்டர் ஆகும்.

கருமையிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்:-
- உடல் எடையை குறைக்கவும் அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்
- கழுத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
- அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்யாதீர்கள்.
- ஹார்மோன்களை பரிசோதிக்கவும்.
- லாக்டிக் ஆஸிட் அடிப்படையிலான கிரீம்கள் / லோஷன்களைப் பயன்படுத்துங்கள்.
- வாசனை திரவியங்களை தோலில் தெளிப்பதை தவிர்க்கவும்.
- சருமத்தை அடிக்கடி தேய்க்ககூடாது.
- சன்ஸ்கிரீமை பயன்படுத்தலாம்.