மேலும் அதிகரிக்கிறதா எரிபொருளின் விலை?
எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான ஐஓசியின் முடிவிற்கு இணங்க இந்த கோரிக்கை உள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருளின் விலையை உயர்த்தியுள்ளது ஆட்டோ டீசல் லிற்றர் ஒன்றின் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 121 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லிற்றர் ஆட்டோ டீசலின் புதிய விலை 124 ரூபாவாகும்.
அதேநேரம், 92 எல்பி பெட்ரோல் விலை லிற்றருக்கு ரூ.7 அதிகரித்து ரூ.184க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், 95 ஒக்டேன் பெற்றோல் 3 ரூபாவால் அதிகரித்து 213 ரூபாவாகும் என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.