தூக்கம் வரமால் கஷ்டப்படுகிறீர்களா? சீக்கிரம் தூக்கம் வர 3 வழிகள்!
அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் ஆசைப்படும் முக்கியமான ஒன்று நல்ல தூக்கம். சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு, குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
இதேவேளை, பலருக்கு சரியான நேரத்தில் தூக்கம் வராமல், காலையில் எழுந்திருக்கும் போது சோர்வாக உணர்கிறார்கள். சில எளிய வழிமுறைகள் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தாமதமான தூக்கத்திற்கான காரணம் : சிலருக்கு பகலில் உறங்கும் பழக்கம் இருக்கும்,இதன் காரணமாக இரவில் வெகுநேரம் தூக்கம் வராமல் இருக்கலாம். சிலர் இரவில் இருட்டில் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அதன் வெளிச்சம் கண்களுக்கு தீங்கு விளைவித்து தூக்கத்தை பாதிக்கிறது.
தூக்கமின்மையை விரட்ட உதவும் 5 உணவுகள் : ஒரு நபர் தூக்கமின்மையால் தொந்தரவு செய்தால், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம். உறங்குவதற்கு செல்வதற்கு 4 மணித்தியாலத்திற்கு முன், சாப்பிட்டு விட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இது தவிர, மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகளும் தூக்கமின்மையை போக்கும்.
- வெள்ளை அரிசி உணவு
- வெள்ளை பிரெட்
- அன்னாசி மற்றும் தர்பூசணி
- குக்கீஸ் மற்றும் கேக்குகள்
- உருளைக்கிழங்கு சேர்த்த உணவு
சீக்கிரம் தூக்கம் வருவதற்கான 3 முக்கிய வழிகள்
- பகலில் தூங்கும் பழக்கத்தை கைவிடுங்கள் தூக்கமின்மையை போக்க, உங்கள் வாழ்க்கைமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். இது இரவு தூக்கத்தை கெடுக்கும். உங்களுக்கு நிச்சயம் தூங்க வேண்டும் என நினைத்தால், பகலில் அரை மணி நேரம் மட்டுமே தூங்குங்கள்.
- அறை வெப்பநிலையை சீராக பராமரிக்கவும் உங்களுக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால், அரையின் வெப்பம் சீராக இருக்க வேண்டும். அதிக வெப்பநிலை அதாவது, சூடாக இருந்தால், தூங்குவதில் சிக்கல்கள் இருக்கும்.
- நேரத்தை அடிக்கடி பார்க்க வேண்டாம்
சிலருக்குத் தூங்கும் போது கடிகாரத்தை திரும்பத் திரும்பப் பார்ப்பதால், தூங்குவதற்கு இவ்வளவு நேரம் ஆகிறதே என மனதில் டென்ஷன் அதிகரிக்கும். இதனால், தூக்கம் வருவது இன்னும் தாமதமாகும்.