பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை மாற்றியமைக்கும் விலைச்சூத்திரம் நடைமுறையிலுள்ளதாகவும் அதன் பிரகாரம் கட்டணத்தை அதிகரிக்காமல் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
கடந்த முறை விலை சூத்திரத்திற்கிணங்கவே விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தால் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோமென பஸ் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறிய அவர் , அதன் காரணமாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாதென தெரிவித்தார்.