புதிய சாதனை படைத்த இந்தியா: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் சோதனை வெற்றி!
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனையானது கப்பலில் இருந்து கப்பலை அதிகபட்ச வரம்பில் குறிவைத்து தாக்கி செய்யப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை மிக துல்லியமாக இலக்கை தாக்கியது. இந்த தகவலை டிஆர்டிஓ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்திய கடற்படை தகவல்
குறித்த தகவலை இந்திய கடற்படை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதில் இந்திய கடற்படை நாசகார கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மேற்கு கடற்கரையில் இருந்து Brahmos supersonic ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
கடல் டூ கடல் வரையிலான இலக்கில் அதிகபட்ச வரம்பு நிர்ணயித்து சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை மிக துல்லியமாக தாக்கியது.
Advanced sea to sea variant of BrahMos Supersonic Cruise missile was tested from INS Visakhapatnam today. Missile hit the designated target ship precisely. @indiannavy @BrahMosMissile#SashaktBharat#AtmaNirbharBharat pic.twitter.com/BbnazlRoM4
— DRDO (@DRDO_India) January 11, 2022
நாட்டின் அதிநவீன நாசகார கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டதாகவும் இந்த ஏவுகணை வைக்கப்பட்ட இலக்கில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பல் ஒன்றை துல்லியகமாக தாக்கி அழித்தது என டிஆர்டி மற்றொரு டுவிட்டில் குறிப்பிட்டுள்ளது.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை
ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததை இந்திய கடற்படை பாராட்டியது. ஒலியை விட வேகமாக பயணிக்கும் பிரமோஸ் ஏவுகணை முப்படையினரும் உபயோகிக்கும் வகையில் இருக்கிறது.
காரணம் ராணுவம், விமானப்படையினர் முன்னதாக இந்த ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் கடற்படை இந்த சோதனையில் கடல் டூ கடலில் இலக்கு நிர்ணயித்து நடத்தப்பட்ட சோதனையும் வெற்றிகரமாக நடந்துள்ளது.
துல்லியமாக அழித்து சோதனையில் வெற்றி
இதேபோல் நீருக்கு அடியில் இலக்கை நிர்ணயித்து அதை தாக்கி துல்லியமாக அழிக்கும் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடல் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையும் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது.
Successful test-firing of the extended-range #BrahMos supersonic cruise missile from #INSVisakhapatnam, #IndianNavy's newest indigenously-built guided missile destroyer, represents a twin achievement...(1/2) https://t.co/bzeHL9D0zd
— SpokespersonNavy (@indiannavy) January 11, 2022
இந்த பிரம்மோஸ் ஏவுகணை முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஏவுகணையை ஏவிய பிறகும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நகர்ந்தால் இருப்பிடத்திற்கு ஏற்ப திசைமாறி தாக்கும் திறன் கொண்டதாகும்.
800 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை தாக்க முடியும்
இந்த ஏவுகணையின் எடையானது 3000 கிலோவாகவும், 2 அடி விட்டமும், 28 அடி நீளமும் கொண்டதாகும். இந்த ஏவுகணையில் 200 கிலோ வரை எடை கொண்ட வெடிகுண்டை வைத்து ஏவ முடியும். இந்த ஏவுகணையானது 800 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கையும் துல்லியமாக தாக்கும்.
இது இரட்டை சாதனை எனவும் அது கடற்படையின் போர் அமைப்பு மற்றும் ஆயுத வளாகத்தின் துல்லியத்தை மேம்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.
சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை
இந்த ஏவுகணை கடற்படை மற்றும் நாட்டிற்கு வழங்கும் புதிய திறனை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அதேபோல் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் என்பிஓஎம் இணைந்து கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது.
இது நவீன கால போர்க்களங்களின் பெரும் தடுப்பு ஏவுகணை ஆகும். இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை ஆனது கடல், நிலம் மற்றும் வான் இலக்குகளுக்கு எதிராக அதன் வலிமையை நிரூபித்துள்ளது.
எரிபொருள் பூஸ்டர் என்ஜின்
பிரம்மோஸ் ஆனது இரண்டு நிலைகள் கொண்ட திட எரிபொருள் பூஸ்டர் என்ஜின் கொண்ட ஒரு ஏவுகணையாகும். சூப்பர்சோனிக் வேகத்தில் பாயும் இதன் முதல் நிலை பாய்ச்சலானது இரண்டாம் நிலையில் அவ்வேகத்தில் இருந்து பிரிக்கப்படும்.
இதன் ஸ்டீல்த் டெக்னலாஜி வழிகாட்டி மற்றும் மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட மென்பொருளானது ஏவுகணையின் தாக்குதல் சக்தியோடு சேர்த்து எதிரிகளின் பயத்திற்கும் தீனி போடுகிறது. பிரம்மோஸ் ஆனது உலகின் எந்தவொரு ஆயுத அமைப்பாலும் இடைமறிக்கமுடியாத ஒரு ஏவுகணை ஆகும்.
பிற ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு சிறப்பு
குறைவான ஒளிச்சிதறல், தாக்குதலுக்கான வேகமான முடிவுகளை கையாளும் இந்தியாவின் பிரம்மோஸ் ஆனது உலக நாடுகளின் இதர சப்சோனிக் (ஒலி வேகத்தை விடக் குறைந்த) ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு சிறப்பானதாகும்.
அதாவது 3 மடங்கு அதிக வேகம், 1.5 முதல் 3 மடங்கு அதிக விமான வரம்பு (தாக்குதல் எல்லை), 3 முதல் 4 மடங்கு அதிக தேடல் வீச்சு, 9 மடங்கு அதிகமான இயக்க நேரம் கொண்டுள்ளது.
உலகின் அதிவேகமான சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ்-ன் பூஸ்டர் (திட எரிபொருள்) இனி இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.