இலங்கைக்கு 40 ஆயிரம் தொன் பெற்றோல், டீசலை விநியோகித்தது இந்தியா
எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் தொன் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்தியா விநியோகித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி தடைப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா நேற்று 40,000 டன் டீசல் மற்றும் பெட்ரோலியத்தை நாட்டிற்கு விநியோகித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா இலங்கையின் வலுவான பங்காளி மற்றும் உண்மையான நண்பன். இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 40,000 டன் எரிபொருளை வழங்கினார்.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு வருகை தந்திருந்த வேளையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.