ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ; சுகாதார அமைச்சு வெளியட்ட அதிர்ச்சி தகவல்
நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது , கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திர சிகிச்சை கட்டில்களில், 52 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்சிசன் தேவையுடைய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.
இந்நிலையில் , பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.