தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பகீர் சம்பவம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை வெளி நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவ,ம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர் மருதானை, ஆனந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் போர்வையில் வைத்தியசாலைக்கு வந்த சந்தேக நபர் மீண்டும் வைத்திய சாலையின் வார்டுக்குச் சென்று, கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.