குக்கரில் சமைப்பவர்களா நீங்கள்? குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா
இன்றைய அவசர காலகட்டத்தில் உலகில் பிரஷர் குக்கர் மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது குறுகிய மணித்தியாலத்தில் உணவை சமைக்க முடிகிறது.
எனினும், பல்வேறு காரணங்களால் இந்த குக்கர் சில நேரங்களில் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.
இந்நிலையில் பிரஷர் குக்கரைப் உபயோகப்படுத்துபவர்கள், ஆபத்துக்களை தவிர்க்க சில உணவுப் பொருட்களை அதில் சமைக்காதீர்கள். இப்போது குக்கரில் சமைக்கக்கூடாத உணவுப் பொருட்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அரிசி : தற்போதைய காலக்கட்டத்தில் குக்கரில் பலரும் சாதத்தை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் குக்கரில் அரிசியை சமைப்பதால், அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் உருவாகி, பல தீங்கு விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. மேலும் குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிட்டால் உடல் பருமனாகும். எப்படியெனில் குக்கரில் சாதத்தை சமைக்கும் போது, அதில் உள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருக்கிறது. இதனால் உடல் எடை கூடுகிறது.
உருளைக்கிழங்கு : பிரஷர் குக்கரில் நம்மில் பலர் உருளைக்கிழங்கை தான் வேக வைப்பார்கள். ஏனெனில் உருளைக்கிழங்கை எளிதில் வேக வைப்பதற்கான எளிய வழி இது தான். எனினும், உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளது. எனவே இதை குக்கரில் சமைக்கக்கூடாது. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும். அதுவும் புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பல உடல்நல நோய்களுக்கு வழிவகுக்கும்.
பால் : பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களை எப்போதும் பிரஷர் குக்கரில் சமைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குக்கரானது விரைவில் வேகாமல் இருக்கும் உணவுகளுக்காக தயாரிக்கப்பட்ட பாத்திரம். ஆனால் பால் குறைவான நேரத்தில் சூடாகக்கூடியது என்பதால் பாலால் தயாரிக்கப்பட்ட எந்த உணவுப் பொருட்களையும் குக்கரில் சமைக்காதீர்கள்.
முட்டை : குக்கரில் முட்டைகளை சிலர் வேக வைப்பார்கள். பிரஷர் குக்கரில் முட்டைகளை வேக வைக்கும் போது பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. முட்டைகளை வேக வைப்பதற்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எனவே அதிக வெப்பநிலையில் வைத்து முட்டைகளை குக்கரில் சமைத்தால் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
பழங்கள் : மற்றும் காய்கறிகள் பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகளை விட சத்தானவை எதுவும் இருக்க முடியாது. இப்படி சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதும் குக்கரில் போட்டு வேக வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அவற்றில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.
மீன் : பொதுவாக அடுப்பிலேயே மீன் வேகமாக வெந்துவிடும். இவ்வாறு இருக்க மீனை குக்கரில் ஒருபோதும் சமைக்கக்கூடாது. ஏனெனில் மீன் சற்று அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், அதன் சுவையே கெட்டுவிடும். அதோடு மீனில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும். எனவே மீனை குக்கரில் சமைக்காதீர்கள்.