கர்ப்பிணிகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணிகள் நெரிசலான இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதேசமயம் கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தாம் காண்பதாக காசல் வீதி மகளிர் வைத்தியசாலை யின் பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.
எனவே, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முந்தைய சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் நீண்ட வார விடுமுறை நாட்கள் வருவதால் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
விருந்துகள் மற்றும் விடுமுறைக்கு விடுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டு வீட்டில் தனியாக இருங்கள். இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் குறித்த தாய்மார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை சில மாதங்களுக்குப் பிறகு, நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியது என்றும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 829 ஆக அதிகரித்துக் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 98,536 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.