மக்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி கூறிய ஆளுநர்
தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான தை பொங்கலுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில்,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாகக் கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கல் நாளில் அனைவரிடமும் அன்பு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, பிறருக்கு உதவி செய்தல் ஆகிய நற்பண்புகளை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற மக்களுக்கும் சில காரணங்களால் கொண்டாட முடியாதவர்களுக்கும் எனது தைப்பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.