தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸி., கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்!
தமிழ்ப் பெண் வினி ராம்னோடவை கடந்த 5 வருடங்களாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் காதலித்து வந்த நிலையில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த திருமண நிகழ்வு மார்ச் மாதம் 27ஆம் திகதி Melbourne Burwood Blackburn Road -யில் நடைப்பெறவுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

கொரோனா காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழலில் தற்போது மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது.
அவர்களது திருமண பத்திரிகை தமிழில் அச்சிடப்பட்டுள்ளதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.
