பொலிஸ் மா அதிபர் பதவியை பேராயருக்கு வழங்குங்கள்!
நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறதாகவும் ஞானசார தேரர் கூறினார்.
அத்துடன் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணை நடத்தப்படும் முறையொன்று உள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை எனவும் தெரிவித்த தேரர், கர்தினால் பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார் என்றும், அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.