நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. க.பொ.த உயர்தரப் பரீட்சை 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
அத்துடன், இந்த வருடம் 345,242 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
அதேவேளை கொரோனா அச்சம் காரணமாக கடந்த வருடம் ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர் தரபரீட்சை இன்று காலை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைப்பு பரீட்சை நிலையங்கள் 08 உடன் இணைந்ததாக 71 பிரதான பரீட்சை நிலையங்கள் அமைக்க ப்பட்டுள்ளன.
இதில் தமிழ் மொழி மூலம் 9406 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 42 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 03 மாணவர்களும் இம் முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



