கம்பஹாவில் தந்தை - மகளுக்கு நேர்ந்த பரிதாபம்: சோகத்தில் குடும்பத்தினர்
கம்பஹாவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவது, மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் கம்பஹா உக்கல்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதான சிறுமி மற்றும் 42 வயதுடைய தந்தையே உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பௌசர் வாகன சாரதியின் கவனக்குறையினால ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.