வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்
வெளிநாட்டுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம் மற்றும் பணம் அனுப்பும் தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு வரிச் சலுகையில் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் (Mohamed Muzammil) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (08-02-2022) செவ்வாய்கிழமை அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) இது குறித்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நாடு திரும்புவதற்கு ஒரு டொலர் ஒன்றிற்கு 240 ரூபாவை வழங்க முன்மொழிந்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.